சென்னை பிப், 20
தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10:30 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் புதிய படங்களை எட்டு வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை விடுப்பது குறித்து விவாதம் நடத்தப்படுகிறது. அதனை தயாரிப்பாளர்கள் ஏற்காத பட்சத்தில் கேரளாவை போன்று வரும் 22 ம் தேதியிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.