சென்னை பிப், 19
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது திறமையை நிரூபித்தவர் மயில்சாமி. மாரடைப்பால் கடந்த ஆண்டு பிப்ரவரி 19 அவர் உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. கஷ்டப்படுபவருக்கு ஓடோடி உதவும் உள்ளம் கொண்ட அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.