சென்னை பிப், 14
காதலர் தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது ஒரு பெரிய காம்பு கொண்ட ரோஜா 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. 15 ரோஜா பூக்கள் அடங்கிய ஒரு ரோஜா கட்டு ரூ.350 க்கும் கடந்த வாரம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை இன்று 500 ரூபாய் அதிகரித்து ரூ.1500 க்கும் விற்பனை ஆகிறது. அதேபோல் கனகாம்பரம், அரளிப்பூ, வாடாமல்லி, சம்பங்கி பூ, செவ்வந்திப் பூ என அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.