சென்னை பிப், 12
“சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தொடங்க இருந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் பிப்ரவரி 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2009க்கு பின்னால் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதனை நிறைவேற்றக் கோரி தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் ஆசிரியர்கள் இன்று முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தனர்.