கீழக்கரை பிப், 12
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மக்தூமியா துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் 49 ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் செய்யது அபுதாஹிர் தலைமையில் ஜமாத் பொருளாளர் அல்ஹாஜ் ஹாஜா ஜலாலுதீன் தேசிய கொடியேற்றினார், மக்தூமியா முன்னாள் மாணவரும் SDPI கட்சியின் தமிழ்மாநில துணை தலைவருமான அப்துல்ஹமீது பள்ளி கொடியை ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார். ஜமாத் உறுப்பினர் மங்குஸ்தான் ஒலிம்பிக் கொடியேற்றினார்.
மக்தூமியா தொடக்கப்பள்ளி செயலாளரும் நகர்மன்ற உறுப்பினருமான மூர் நவாஸ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து ஆண்டு விழா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
மேலும் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா,மக்தூமியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், துவக்கப்பள்ளி தாளாளர் முகம்மது மீரா சாகிபு, வணக்கம் பாரதம் இதழ் மாவட்ட நிருபர் ஜஹாங்கீர் அரூஸி,முகம்மது ராஜாக்கான்,பழைய குத்பா பள்ளி ஜமாத் செயலாளர் மூர் ஜெய்னுதீன், முகம்மது சதக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
விழா நிகழ்ச்சிகளை துவக்கப்பள்ளி தலைமையாசிரியை முகம்மது ரிஸ்வானா மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை கிருஷ்ணவேணி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மிக சிறப்பாக செய்திருந்தனர்.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்