கீழக்கரை பிப், 14
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் வாறுகால் பாக்ஸின் மூடிகள் தரமற்றவையாக இருப்பதால் அடிக்கடி உடைந்து வாகனங்களை காவு வாங்க காத்திருக்கின்றன.
ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி மெயின் கேட் அருகில் உள்ள வாறுகால் மூடி உடைந்து குழியாக காட்சி தருகின்றன.குழிக்குள் பள்ளி செல்லும் குழந்தைகள் வாகனங்கள் விழுந்து விடாதவாறு எச்சரிக்கை கம்பு ஒன்றை சமூக ஆர்வலர் ஒருவர் நட்டி வைத்துள்ளார்.
இந்த மூடி உடைந்து நான்கு நாட்களாகியும் வாட்சப் போன்ற சமூக வலை தளங்களில் பேசும் பொருளாகியும் இதுவரை அதனை சரி செய்யும் நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்று கீழக்கரை நகர் SDPI கட்சி செயலாளர் காதர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் சமூக ஆர்வலர்களான அஜிஹர்,கிரௌன் ஹுசைன்,ஹமீது பைசல் ஆகியோர் நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்வதோடு தரமான மூடிகள் அமைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்