சென்னை பிப், 4
மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. மொத்தம் 130 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 41 ஆயிரத்து 485 பேர் எழுதுகின்றனர். காலை 10:30 மணிக்கு நடைபெறும் இந்த தேர்வு பிற்பகல் 1:30க்கு முடிவடைகிறது. தேர்வு விதிமுறை மற்றும் கட்டுப்பாடுகளை தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டும் என தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.