கீழக்கரை ஜன, 26
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ஜவாஹிர்ஹுசைன் கொடியேற்றி வைத்து, மக்களிடையே சுய ஒழுக்கமும்,கட்டுப்பாடும் மேலோங்கிட வேண்டுமென தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர் பிரவீன் ராஜ் MD, தலைமை செவிலியர் ராவியா, செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தேசிய கொடியேற்றி வைத்து அனைவருக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் செல்வராஜ், நகர்மன்ற துணைத்தலைவர் ஹமீதுசுல்தான், நகர்மன்ற உறுப்பினர்களான மூர் நவாஸ், சக்கினா பேகம், உம்முசல்மா, காயத்ரி, சித்திக், சேக் உசேன், பயாஸுதீன், சூர்யகலா, பவித்ரா, பைரோஸ் பாத்திமா, ஜெயலட்சுமி, முதன்மை பொறியாளர் அருள், சுகாதாரத்துறை ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மக்தூமியா மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் இப்திகார் ஹஸன் தலைமையில் வழக்கறிஞர் நாதியா ஹனிபா கொடியேற்றி வாழ்த்துரை வழங்கிட தலைமையாசிரியை கிருஷ்ணவேனி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் செய்யது அபுதாஹிர், செயலாளர் மூர் ஜெய்னுதீன், பொருளாளர் ஹாஜா ஜலாலுதீன், மூர் ஹஸனுதீன், சபீர் அலி மற்றும் ஆசிரியர்கள்,மாணவர் மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியில் தாளாளர் முகம்மது ஜக்கரியா தலைமையில் PSA. அமீர் அலி கொடியேற்றி வைத்தார். தலைமையாசிரியை செய்யதலி பாத்திமா வரவேற்றார். நிகழ்ச்சியில் கல்விக்குழு தலைவர் சேக் உசேன், கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க செயலாளர் செய்யது இப்றாகீம், ஆசிரியர்கள், மாணவர், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் கிழக்குத்தெரு ஜமாத் துணைத்தலைவர் முகம்மது ரமீஸ் தலைமையில் அகமது பயாலுதீன் கொடியேற்றி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் செய்யது அபுதாஹிர் வரவேற்றார், இமாம் அப்துல் வாஹித் ஆலிம் கிராஅத் ஓதினார்,பள்ளி தாளாளர் கவிஞர் முகம்மது சுஐபு வாழ்த்துரை வழங்கினார்.தமிழாசிரியர் அப்துல் கபீர் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் அஜிஹர், முக்தார்,பொறியாளர் ஆசிப் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள்,மாணவர் மாணவிகள் பெற்றோர்கள்,பள்ளி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திரு.இருதய ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் நிக்கோலஸ் கொடியேற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார். உதவி ஆசிரியர் இக்னேஷியஸ் வரவேற்றார், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் ஆசிரியை மரியம் பர்வீன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியைகள்,பள்ளி மாணவர் மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் கிழக்குத்தெரு ஜமாத் தலைவர் ப. அ. சேகு அபுபக்கர் சாகிபு தலைமையில், பள்ளி தாளாளர் சதக் அப்துல் காதர் முன்னிலையில் பள்ளியில் முன்னாள் மாணவர் சேகு அபுபக்கர் சாதிக்(எ)தொண்டியப்பா கொடியேற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் அகமது பரீத் உள்ளிட்ட கிழக்குத்தெரு ஜமாத் நிர்வாகிகள் கல்விக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவர், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்//ராமநாதபுரம்