மதுரை ஜன, 23
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை அவர் நேரில் பார்க்க உள்ளார். இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் 3,669 மாடுபிடி வீரர்களும் 9,312 காளைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் போட்டி மைதானம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.