விருதுநகர் ஜன, 16
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் 48 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தது.
இதில் விருதுநகர் மாவட்டத்திற்கு 18 வது காவல் கண்காணிப்பாளராக அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த பெரோஸ்கான் அப்துல்லாவை விருதுநகர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக அறிவித்து உத்தரவிட்டிருந்தது.
இதை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பெரோஸ்கான் அப்துல்லா இன்று விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு காவல்துறையினர் மரியாதை அளித்து வரவேற்பு கொடுத்தனர். அதை தொடர்ந்து மாவட்டத்தில் பணி புரியும் அனைத்து காவலர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லாவை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.