கீழக்கரை ஜன, 15
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான், நகர்மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டன.
கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் லதா ஜாக்குலின் பெக்டஸ் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் உதவி தலைமையாசிரியர் அன்பர் நிசா பேகம்,ஆசிரியைகள்,பள்ளி அலுவலக பணியாளர்கள்,மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொங்கல் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு பள்ளி தாளாளர் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் அனைத்து ஒத்துழைப்பும் கொடுத்து காணொளி வாயிலாக ஆசிரியைகள், மாணவிகளுக்கு பொங்கல் வாழ்த்து செய்தியை பகிர்ந்து கொண்டார். பள்ளி தாளாளரின் சமத்துவ சிந்தனை பாராட்டிற்குரியதாகும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.