கீழக்கரை ஜன, 14
தமிழகம் முழுவதும் அனைத்து நியாயவிலை அட்டைதாரர்களுக்கும் இலவச பொங்கல் சிறப்பு தொகுப்பாக வேட்டி, சேலை,1000 ரூபாய் ரொக்கம், முழு கரும்பு, ஒருகிலோ சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
பெரும்பாலான ஊர்களில் அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நியாய விலைக்கடைகளில் மட்டும் வேட்டி,சேலை கொடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பொதுமக்கள் தாங்கள் வாங்கிய பொருட்களை ரேஷன் கடைக்கு திருப்பி அளித்து சென்றனர்.
கீழக்கரைக்கு மட்டும் ஏன் கொடுக்கவில்லை? என்பதை மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்துவதோடு, விடுபட்ட அனைவருக்கும் இலவச வேட்டி சேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நமது செய்தியாளர் நியாய விலை ஊழியக்காரர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, 900 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெறும் 400 ரேசன் அட்டைகளுக்கு கொடுக்கும்படியான வேட்டி சேலைகளே வந்துள்ளன அதனால் தாங்கள் அளிக்க முடியவில்லை என அவர்கள் தங்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
வருடத்திற்கு ஒருமுறை தமிழக அரசால் வழங்கப்படும் இந்த பரிசுத் தொகுப்பில் இவ்வகையான குளறுபடிகளை தமிழக அரசு சரி செய்து அவர்களுக்கு சரியான பரிசுத்தொகை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்.