சென்னை ஜன, 11
1-8 ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி திறனை அதிகரிக்க, தமிழ்நாடு முழுவதும் 22,418 அரசு தொடக்கப் பள்ளிகளில், “ஸ்மார்ட் போர்ட்” வசதி 6,992 நடுநிலைப் பள்ளிகளில் “ஹைடெக் லேப்” வசதிக்கான அனைத்து பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. இந்த ஹைடெக் லேப் கணினி குறித்து தகவல் தெரிந்த ஒருவர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதன் மூலம் நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு பணியாளர் வீதம் 6,992 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.