கீழக்கரை ஜன, 7
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று மாலை 4.30 மணியளவில் கீழக்கரை தீனியா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்-மாணவிகளுக்கான கல்வித்திறன் ஊக்கப்பயிற்சி முகாம், பள்ளி தாளாளர் நூருல் அமீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை பள்ளி தலைமையாசிரியர் ஜாஹிரா தொகுத்து வழங்கினார். கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டியும் ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளருமான சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தீனியா கல்விக்குழு துணை தலைவர் சன்சைன் நூருல் அன்சாரி, ஆசிரியைகள், மாணவர்-மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி.
மாவட்ட நிருபர்.