புதுடெல்லி டிச, 30
இந்திய வரலாற்றில் முதல்முறையாக மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தலைமை இயக்குனராக நினா சிங் எனும் பெண் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை விமான நிலையங்கள், மத்திய அரசு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த நினாசிங் இப்படைக்கும் புதிய இயக்குனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.