நாகப்பட்டினம் ஆகஸ்ட், 23
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்படியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரையும் திரிகோணமலை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.