ராமநாதபுரம் டிச, 26
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள ஸ்ரீ மங்கலநாதசுவரர் கோவிலில் ஆருத்ரா விழா இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தற்போது விழாக்கோலம் கொண்டுள்ளது.