புதுடெல்லி டிச, 24
இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் மூத்த உதவியாளர் பிரிவுகளில் காலியாக உள்ள 119 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் டிசம்பர் 27ம் தேதி முதல் ஜனவரி 26 ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்கள் அறிய https://www.aai.aero என்ற இணையதள முகவரியை காணலாம்.