தூத்துக்குடி டிச, 21
தூத்துக்குடியில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அரிசி, பால், பிரட், பிஸ்கட், போர்வைகள் போன்ற நிவாரண பொருட்கள் லாரிகள் மூலம் வருகின்றன. பின்னர் அங்கிருந்து ஒவ்வொரு முகாம்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.