துபாய் டிச, 20
ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள Danube Sports World விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்ற ரோவர்ஸ் சர்வதேச மாணவர்கள் விளையாட்டு திருவிழா – 2023. இவ்விளையாட்டில் தமிழர்களின் பாரம்பரியமிக்க கலைகளில் ஒன்றான சிலம்பாட்டம் போட்டி தமிழ்நாட்டிலும் வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டிலும் நடைபெற்றது. இவ்விரு இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான இறுதி போட்டி துபாயில் நடைபெற்ற ரோவர்ஸ் சர்வதேச மாணவர்கள் விளையாட்டு திருவிழா Danube Sports Worls Indoor Stadium அரங்கில் நடைபெற்றது.
இவ்விறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் திறமைகளை பாராட்டு விதமாக சிலம்பம் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு துபாயில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக துபாயில் உள்ள பிரபலங்களான Spread Smiles ஈவண்ட் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா, மனநல ஆலோசகர் டாக்டர் பஜிலா அசாத், கேப்டன் டிவி மற்றும் புதுகை ஸ்டார் நியூஸ் வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல் , சையத் முகது – டைஸ் டிசைன் , அமீர்ஜான்
– விளையாட்டு ஆர்வலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ROVERS CEO – Jeelani Subahan ஒருங்கிணைப்பில் ஏராளமான சிலம்பாட்ட கண்காணிப்பாளர்கள் கத்தாரிலிருந்தும் தமிழகத்திலிருந்து துபாயில் இருந்து கலந்துகொண்டனர் மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர்கள்,சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோர் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தனர்.
மேலும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கப்படுத்தும் அறிவுரைகள், எடுத்துக்காட்டுகள் கூறி சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த மக்கள் ஆர்ஜே சாரா, மனநல ஆலோசகர் டாக்டர் பஜிலா அசாத், கேப்டன் டிவி மற்றும் புதுகை ஸ்டார் நியூஸ் வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் KVL , சையத் முகது டைஸ் டிசைன், அமீர்ஜான் – விளையாட்டு ஆர்வலர் ஆகியோர் வாழ்த்துக்கள் கூறி சிறப்புரையாற்றினர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.