நெல்லை டிச, 20
நெல்லை ரயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாளம் மற்றும் பிளாட்பாரம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. மழை ஓய்ந்த பின்னர் மின்மோட்டார்கள் மூலம் ரயில் நிலையத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. இதனுடைய நேற்று மாலை 5:20 மணிக்கு மழைநீர் அகற்றும் பணி நிறைவடைந்தது. இரவு 11:05 மணிக்கு ரயில் சேவை தொடங்கியது.