தூத்துக்குடி டிச, 19
தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் சவால் நிறைந்ததாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். தூத்துக்குடி மாநகரை சூழ்ந்துள்ள வெள்ள நீர் வடிவது தாமதமாவதாகவும், ஆங்காங்கே ஏரி குளம் நிரம்பி கரைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். அதோடு பல்வேறு இடங்களில் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதில் சிரமம் உள்ளதாக கூறினார்.