துபாய் டிச, 18
ஐக்கிய அரபு அமீரக துபாயில் துபாய் புள்ளிங்கோ என்ற டிக் டாக் குழுமத்தின் தமிழ் இளைஞர்கள் நடத்திய மக்கள் இசை விருந்து- 2023 மற்றும் கலை நிகழ்ச்சி துபாயில் உள்ள டி மோன்போர்ட் பல்கலைக்கழக உள்ளரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்1500க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினரோடு பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழகத்தில் கானா பாடல்களால் கலக்கிக்கொண்டிருக்கும் கானா பாடல்களால் பிரபலமான கானா சுதாகர், கானா மைக்கல், கானா வினோத், ஜூனியர் நித்யா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக அமீரக தேமுதிக செயலாளரும், கேப்டன் டிவி வளைகுடா முதன்மை நெறியாளருமான கேவிஎல் கமால், ஜிவி ப்ரொடக்சன் கோகுல் பிரசாத், TAM ஷாநவாஸ், தமிழகத்தின் தேசிய நாளிதழ் தினகுரல் வளைகுடா நிருபர் நஜீம் மரிக்கா உள்ளிட்டோரும் மேலும் அமீரக தமிழ்ச்சங்க தலைவி டாக்டர் ஷீலூ, மீடியா7 அஸ்கர், கள்ளக்குறிச்சி சின்னா, அமீரக பாடகிகள் மிருதுளா, வள்ளி, சமிக்ஷா மற்றும் பொதுமக்கள் பலர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை துபாய் புல்லிங்கோ ஷாநவாஸ் , புல்லிங்கோ ஹயாஸ்,
புல்லிங்கோ ஜனனி உள்ளிட்டோர் மற்றும் துபாய் டிக்டாக் புல்லிங்கோ குழுவினர்கள் இப்ராஹிம், ஸ்ரீ, ரிச்சர்ட், பெர்னி, சமீர் மற்றும் நியாஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து செய்திருந்தனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.