சென்னை டிச, 13
எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு CPCL நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன் அறிக்கையில் “சென்னை பக்கிங்ஹாம் கால்வாய் எண்ணூர் கழிமுகப்பகுதி உட்பட எண்ணை கசிவு ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து உடனடியாக அவற்றை சிபிஎல் நீக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வு நடைபெறாது என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது