சென்னை டிச, 7
ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவால் நவம்பர் 15ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. பின் அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்தப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரை உடனே மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.