ராமநாதபுரம் நவ, 26
மாவட்ட பாஜக நிர்வாகிகள் மண்டல தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் முரளிதரன் முன்னிலை வகித்தார். மக்களவைத் தேர்தல் பணி குறித்து மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர் பவர் நாகேந்திரன், மணிமாறன் மாவட்ட துணை தலைவர் சங்கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.