மாலத்தீவு நவ, 19
இந்தியா தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என மாலத்தீவின் புதிய அதிபர் முகமது மூயிஸ் முறைப்படி இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 17ம் தேதி மாலை தீவின் எட்டாவது அதிபராக முகமது மூயிஸ் பதவி ஏற்றுக்கொண்டார். இவர் பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் இந்திய ராணுவத்தை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கையை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜிவிடம் தெரிவித்துள்ளார்.