கீழக்கரை நவ, 18
ராமநாதபுரம் மாவட்ட கடலாடி வட்டார ஜமாத்துல் உலமா சபையின் மூன்றாண்டு கால புதிய நிர்வாகிகளின் தேர்தல் ஏர்வாடி அல் மஸ்ஜிதுல் ஜாமியா வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலான ஜலாலுதீன் அன்வாரி முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில் கடலாடி வட்டார தலைவராக ஏர்வாடி அல்ஹாஜ் செய்யது பாரூக் ஆலிம்,செயலாளராக மௌலானா சிக்கந்தர் காசிமி ஆலிம்,பொருளாளராக மௌலானா முர்சல் இப்ராகீம் ஃபைஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் மத்தியில் பொறுப்பேற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆய்வாளர் மௌலானா அன்வாரி ஹஜ்ரத், மாவட்ட பொருளாளர் மௌலானா சாஹிப் ஆலிம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.
புதிய செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சிக்கந்தர் காஸிமி ஆலிம் நன்றியுரை கூறினார்.
ஜஹாங்கீர் ஆரூஸி.
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.