திருவண்ணாமலை ஆகஸ்ட், 21
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. முக்கிய பகுதிகளில் இந்து அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் குழுக்கள் சார்பில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவார்கள். இவ்வாறு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
மேலும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது எந்தவித பிரச்சனையும் ஏற்படாத வகையில் ஊர்வலம் நடைபெறும் முக்கிய பகுதிகளில் நேற்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.