சென்னை நவ, 13
தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பட்டாசு வெடிப்பால் சென்னை, கடலூர் வேலூர் திருச்சி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்று மாசு அதிகரித்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் மாணவர்கள்- மக்களின் உடல்நலம் கருதி நாலையும் பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்தால் நல்லது என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.