சென்னை நவ, 13
தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது
அதில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 581 வழக்குகளும், அதிக அளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக 19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனை அடுத்து மதுரையில் 141 வழக்குகளும், கோவையில் 66 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 600 க்கும் அதிகமானோர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.