அரியலூர் நவ, 13
அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் முதல் கட்டமாக செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டு ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 38 எண்ணிக்கையிலான மகளிருக்கு மாதம் தோறும் 1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வாலாஜா நகரம் ஊராட்சி, அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 6217 மகளிருக்கு உரிமை தொகை காண வங்கி பற்று அட்டைகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
இதில் அரியலூர் வட்டத்தை சேர்ந்த மகளிர், ஜெயங்கொண்டம் வட்டத்தை சேர்ந்த மகளிரும், செந்துறை வட்டத்தைச் சேர்ந்த மகளிர், ஆண்டிமடம் வட்டத்தை சேர்ந்த மகளிரும் பயன்பெற உள்ளனர். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆனி மேரிஸ் ஸ்வர்ணா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பா கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், பரிமளம், மாவட்ட நிலை அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.