பீகார் நவ, 10
படித்த பெண்களையும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதையும் தொடர்புபடுத்தி பீகார் முதல்வர் நித்திஷ் குமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சைக் கண்டித்து பேசிய நிர்மலா சீதாராமன், மாநிலத்தின் முதல்வர் மூத்த அரசியல்வாதியான நிதிஷ்குமார் சட்டசபையில் மலிவான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். பெண்களின் கல்வி, ஆரோக்கியம் குறித்து சட்டசபையில் பேசியது வெட்கக்கேடானது என்று விமர்சித்துள்ளார்.