கேரளா நவ, 9
73 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய கேரளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 1950 முதல் நீண்ட நாட்களாக வழக்கறிஞராக பணியாற்றி வரும் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இது குறித்து பேசிய பாலசுப்பிரமணியன், என் மீது நம்பிக்கை வைத்து வழக்குகளை கொடுக்கின்றனர். உடல்நிலை ஒத்துழைக்கும் வரையில் வழக்கறிஞர் பணியை மேற்கொள்வேன் என்று தெரிவித்தார்.