காஞ்சிபுரம் அக், 31
தமிழகத்தில் சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும், 16 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.