கமுதி அக், 30
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளை திறந்து வைத்து, பார்த்திபனூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருவதை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.