Spread the love

கீழக்கரை அக், 21

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளுக்கு கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

இப்போட்டியினை ராமநாதபுரம் மன்னரும் கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவருமான நாகேந்திர சேதுபதி அவர்கள் துவங்கி வைத்தார். இப்போட்டிகளில் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 13 ஆண்கள் அணியினரும் 9 பெண்கள் அணியினரும் கலந்து கொண்டு விளையடினர்.

ஆடவர் பிரிவிற்கான முதல் பரிசினை அழகப்பா பல்கலைகழக உடற்கல்வியியல் கல்லூரியும், இரண்டாம் பரிசினை புதுவயல் வித்யகிரி கல்லூரியும், மூன்றாம் பரிசினை காரைக்குடி அழகப்பா கலை கல்லூரியும் நான்காம் பரிசினை கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் பெற்றனர்.

மகளிருக்கான கால்பந்தாட்ட பிரிவின்

முதல் பரிசினை அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரியும் இரண்டாம் பரிசினை

இராமநாதபுரம் செய்யது அம்மாள் கல்லூரியும் மூன்றாம் பரிசினை கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி அணியும்

நான்காம் பரிசினை அழகப்பா கலை கல்லுரி அணியும் பெற்றனர்.

மேலும் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு கோப்பையை முகமது சதக் அறகட்டளையின் இயக்குனர் ஹபீப் முஹம்மது வழங்கினார். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற இப்போட்டிகளை , முகமது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் மற்றும் முகமது சதக் தொழில்நுட்ப கல்லூி முதல்வர் சேக் தாவூத் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் தவசிலிங்கம் செய்திருந்தார்.

ஜஹாங்கீர் ஆருஸி

மாவட்ட நிருபர்.

கீழக்கரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *