ராமநாதபுரம் அக், 20
தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் சார்பாக தமிழகத்தில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.
அதனடிப்படையில் 2022 – 2023 ஆண்டிற்கான சிறந்த முதல் மூன்று பள்ளிகளில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டுவரும் இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பள்ளியின் பள்ளியின் தாளாளர் எம்எம்கே. முகைதீன் இப்ராகிமிற்கு விருது வழங்கி கௌராவிக்கப்பட்டது.
கௌராவிக்கப்பட்ட தாளாளர் டெல்லி குர்காவுன் நகரில் நடைபெற்ற சிறந்த கல்வியாளர்களுக்கான சர்வதேச விருது வழங்கும் விழாவில் கௌரவிக்கப்ட்டு சிறந்த தாளாளருக்கான சர்வதேச அளவிலான விருதினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி தாளாளர் கூறுகயில்,
“இதற்காக சிறப்பாக பணியாற்றிய பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கிவரும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்” என நெகிழ்வுடன் கூறினார்.
M.நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.