சென்னை அக், 17
சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை இதற்கு முன்பு விக்ரமை வைத்து இருமுகன் படத்தை இயக்கிய சிபு தமின்ஸ் தயாரிக்க உள்ளார். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர பா.ரஞ்சித்தின் தங்கலான் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் ஆகியவை ரிலீஸ் க்கு தயாராகி வருகிறது.