சென்னை அக், 16
தமிழக முழுவதும் நடைபெற்ற பிளஸ் ஒன் திறனாய்வு மாணவிகளுக்கான தமிழ் இலக்கிய திறனாய்வுத் தேர்வில் 2.20 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் சிறப்பிடம் பெரும் 1500 மாணவ மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1500 வீதம் இரண்டு ஆண்டுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். 2,36,910 பேர் விண்ணப்பித்ததில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 880 பேர் தேர்வு எழுதினார். 16,030 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இம்முறை வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
.