அரியலூர் அக், 14
வங்கி கணக்கில் மாதம் தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை செலுத்தப்படுவதால் பெண்களின் சேமிப்பு உயர்ந்துள்ளது. அதிகரிக்கும் சேமிப்பு கணக்குகளால் தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் புதிய அஞ்சலகங்கள் திறக்கப்படுகின்றன. குறைந்தபட்ச இருப்பு தொகை பிரச்சனை இல்லை மற்றும் எளிதாக பணத்தை பெற முடியும் என்பதால் கிராமப்புற பெண்கள் பலரும் புதிய கணக்குகள் தொடங்குவதால் அஞ்சல் துறையின் வருவாயும் அதிகரிக்கும்.