இலங்கை அக், 14
இந்தியாவின் நாகப்பட்டினம்-இலங்கையின் காங்கேயன் துறை இடையே இன்று காலை பயணிகள் கப்பல் சேவையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைக்கிறார். தொடக்க நாளை ஒட்டி இன்று ஒரு நாள் மட்டும் கட்டண சலுகை அளிக்கப்பட்டு 3000 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர். 35 பயணிகள் இலங்கை செல்ல முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கப்பலுக்கு செரியாபாணி என்று பெயரிடப்பட்டுள்ளது.