சென்னை அக், 14
தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி நேர்முகத் தேர்வு பணியிடங்கள் 344, நேர்முகத் தேர்வு இல்லாத பணியிடங்கள் 25 என மொத்தம் 369 இடங்கள் நவம்பர் 11ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 6, 7 நடத்தப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.