சென்னை அக், 12
இஸ்ரேல்-பாலஸ்தீன போரை நிறுத்த ஐ.நா உடனே தலையிட வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த போருக்கு இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் இந்த போர் இன்னும் தீவிரமடைய கூடிய ஆபத்தை சுட்டிக்காட்டுகிறது. எனவே ஐ.நா பேரவை தலையிட்டு உடனடி போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் என்றார்.