ராமநாதபுரம் அக், 10
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ஜெயக்குமார். கணித பாடத்தில் 18 ஆண்டு கால இவரது சீர்மிகு கல்வியை பாராட்டி சிவகங்கை மாவட்டம் கவனகக் கலை மன்றம் சார்பில் காரைக்குடியில் நடந்த உலக ஆசிரியர் தின கல்வியாளர்கள் சங்க விழாவில் கல்வி சுடர் 2023 விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியர் ஜெயக்குமாரை சக ஆசிரியர்கள், மாணவ மாணவியர் பாராட்டினர்.