துபாய் அக், 9
ஐக்கிய அரபு அமீரக துபாயில் அமீரக தமிழ்சங்கம் மற்றும் கர்த்தின் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய திருக்குறள் ஒப்பித்தல் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஷீலு தலைமையில் கர்ட்டின் பல்கலைகழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குழந்தைகளும் பெண்களும் நூற்றுக்கு மேற்பட்டோர் திருக்குறள் ஒப்பித்து பரிசுகளை வென்றனர் .
தமிழுக்காக, துபாயில் படிக்கும் குழந்தைகளுக்கும் திருக்குறளை படிக்க ஊக்கப்படுத்தும் வகையில் முக்கியத்துவம் அளித்து நடத்தப்பட்ட இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகளாக பால் பிரபாகர் , அமீரகத்தை சேர்ந்த பதூர் அப்துல்லா காமிஸ், ஆர்ஆர் சேலம் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன், கேப்டன் தொலைக்காட்சி வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், தொழில் அதிபர் உஸ்மான் அலி, தொழில் அதிபர் பகவத் ரவி, தொழிலதிபர் பாளையங்கோட்டை ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் குடும்பத்தோடு கலந்துகொள்ள மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அமீரக தமிழ் சங்கம் நிறுவனர் டாக்டர் ஷீலா மற்றும் உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் விருந்து உபசரித்து நன்றியினை தெரிவித்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.