திண்டுக்கல் அக், 1
பழனி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. செல்போன்களை பக்தர்கள் படிவழிப்பாதை, வின்ச் நிலையம், ரோப் கார் நிலையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் ஒப்படைத்து விட்டு செல்லலாம் ஒரு செல்போனுக்கு ரூபாய் ஐந்து கட்டணம் வசூலிக்கப்படும்.