சென்னை செப், 26
பூமியை பாதுகாக்க தற்போதைய இளம் தலைமுறையினர் இணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் மெய்யநாதன் வலியுறுத்தியுள்ளார். இந்த பூமியில் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் பறவைகள் என பல உயிரினங்கள் வாழ்ந்து வருவதாகவும், ஆனால் மனிதர்கள் மட்டும்தான் பூமியை அழித்து வருவதாக வேதனை தெரிவித்த அவர், சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.