நீலகிரி செப், 24
சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெயச்சந்திரன் மாரடைப்பால் ஊட்டியில் காலமானார். நீலகிரி பசுமை இயக்கம் மாநில செயலாளராக இருந்த இவர், விஸ்கோஸ் சாயக்கழிவு பிரச்சனை, கல்லார்- சீகூர் யானை வழித்தட பிரச்சனை, பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட முற்பட்டது. கல் குவாரி பாதிப்புகள் உள்ளிட்ட பல மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து சட்டப் போராட்டம் நடத்தியவர். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.