Spread the love

துபாய் செப், 16

ஐக்கிய அரபு அமீரக துபாய் பர்துபாய் பகுதியில் உள்ள அல் தவ்ஹீத் அடுக்குமாடி கட்டிடத்தில் Spread Smiles என்ற ஊடகம் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் நிறுவனத்தை தமிழ்நாட்டைசேர்ந்த நடிகர் சதீஷ் திறந்துவைத்தார்.

இநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாக ASR Chartered Accountants நிறுவனர் சோனா இராம், கேப்டன் டிவி முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், இமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், கல்ப் கட்ஸ் நிறுவனர் பிரவீன் ஜோய், பாளையங்கோட்டை ரமேஷ், தமிழ் தேசிய வார இதழ் வணக்கம் பாரதம் இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா, தமிழ்குடில் மகாதேவன், SCV ஈவென்ட் ஆனந்த், துபாய் தமிழசங்கம் வசந்த், TEPA பால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிசு அளித்து கௌரவிக்கப்பட்டது. மேலும் நிகச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் சிறப்பு விருந்தினர் நடிகர் சதீஷுக்கும் Spread Smiles நிறுவனர் மக்கள் RJ சாரா நன்றிகளை தெரிவித்தார்.

M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *